கடந்த வியாழக்கிழமை (05.04.2012)  கந்தஹாரில் நிலைகொண்டுள்ள அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படையினருக்கு எரிபொருள் வினியோகிக்கும் 6 ட்ரக் வண்டிகள் தாலிபான் போராளிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் கந்தஹார் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் வினியோகிக்கும் ட்ரக் வண்டிகள் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டதில், 6 ட்ரக் வண்டிகள் எரிந்துபோனதாகவும், 3 ட்ரக் வண்டிச் சாரதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிய இராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தாலிபான் தரப்புப் பேச்சாளர் காரி யூஸுஃப் அஹ்மதி ட்ரக் வண்டித் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளார். இதற்கு முன்னரும் தாலிபான் படையினரின் தாக்குதல்களில் அமெரிக்கத் தலைமையில் இயங்கும் நேட்டோ படையினருக்கு எரிபொருள் வினியோகிக்கும் ட்ரக் வண்டிகள் அடுத்தடுத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements