நியூயார்க் நகருக்கு அல் காய்தா விரைவில் மீண்டும் வருகை” என்ற வாசகங்களுடன் போலி சினிமா போஸ்டர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

‘AL QAEDA COMING SOON AGAIN IN NEW YORK’ என்ற வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்ட பலவண்ண போஸ்டர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து நியூயார்க் போலீஸ் செய்தித் தொடர்பாளர் பால் பிரவுனி கூறுகையில், ‘‘நியூயார்க் நகருக்கு எந்த ஆபத்தும் இதுவரை இல்லை.நகருக்குள் அல் கய்தா தீவிரவாதிகள் ஊடுருவப் போவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை’’ என்றார்.

மேலும் கூறுகையில், ‘‘வெளிநாட்டு அரபுமொழி இணையதளம் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. ‘ஓவியங்கள் & வடிவமைப்பு’ பகுதியில் இந்த போஸ்டர் இடம்பெற்றுள்ளது. எனினும், இந்த இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை’’ என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு இருமுறையும் ஒபாமாவுக்கு ஒருமுறையும் கைகொடுத்த ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுவதால், இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒபாமாவுக்கு தீவிரவாத அச்சுருத்தல் இருப்பதாகச் சொன்னால்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் இத்தகைய தீவிரவாத அச்சுருத்தல் செய்திகள் அவரது ஆதரவாளர்களால் மீண்டும் கிளப்பி விடப்படுகிறதோ என்ற ஐயமும் உள்ளது.

Advertisements