இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ளபகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர்.

பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.

மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். எனினும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறப்போவதை உணர்ந்து கொண்டு அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதுடன், கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும், ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பள்ளிவாசல் வளாகத்தைவிட்டு வெளியேறினால் கலவரமாக கருதப்படும் எனவும், அதற்காக தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் ஏச்சரித்திருந்தனர். இதனையடுத்து பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எனினும் பெருமளவு முஸ்லிம் மக்கள் வளாகத்தை விட்டு வெளியேறி வீதியில் இறங்க முயன்றபோதும், பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர், மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கத்திற்கு எதிரான, பதாகைகள், மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கெதிரான பதாகைகள் போன்றவற்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

யாழ்ப்பாண முஸ்லீம்களுக்காகக் குரல் கொடுப்பதாக கூறிக்கொண்ட புத்திசீவிகள் என அழைக்கப்பட்ட பலர் இந்த சம்பவத்தில் மௌனம் சாதிக்கின்றனர். தன்னார்வ நிறுவனங்கள் தலைமறைவாகிவிட்டன. யாழ்ப்பாணத்தில் வாழும் ஏனைய தமிழ்ப் பேசும் மக்கள் முஸ்லீம் தமிழர்களின் இப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வருதல் மகிந்த பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை உறுதிப்படுத்தும். Posted Image