லண்டன் : சமீபத்தில் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் சர்வதிகாரியும் அதிபருமான கர்னல் கடாபியிடமிருந்து பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி 350 கோடி ரூபாய் 2007ல் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

தேர்தல் செலவுகளுக்கு 6,300 பவுண்டுகளுக்கு மேல் வாங்குவது பிரெஞ்சு சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு செய்தி தளம் மீடியா பார்ட் பிரெஞ்சு அதிபர் சர்கோசி தன் தேர்தல் செலவுக்காக 42 மில்லியன் பவுண்ட் (350 கோடி ரூபாய்) கர்னல் கடாபியிடமிருந்து பெற்றுள்ளதாகவும் அப்பணம் கைமாறிய வங்கி கணக்கு விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

thanks: inneram.com

நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற வைக்க கொள்கையளவில் ஒத்து கொண்டுள்ளதாகவும் அதற்காக 50 மில்லியன் பவுண்டுகள் வரை தருவதாகவும் அரபியில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கடாபியின் முன்னாள் உளவு துறை தலைவர் முஸ்ஸா குஸ்ஸா கையெழுத்திட்டுள்ளார்.

350 கோடி ரூபாயும் பகுதி பகுதியாக பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் கை மாற்றப்பட்டுள்ளது. சர்கோசியின் ஆளும் கட்சி தலைவரான ஜீன் பிரான்கோஸ் கோப்பின் தங்கை வங்கி கணக்கின் மூலமும் பிரெஞ்சு அரசியல்வாதிகள் மற்றும் அரபு தலைவர்களுக்கு மத்தியில் இடைத் தரகராக செயல்படும் ஜியாத் தகிதின் மூலமும் இப்பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

Advertisements