பன்னிரெண்டாம் தேர்வு முடிவுகள் எளிதில் பார்வையிட….
தேர்வு முடிவுகளை , பல இணைய தளங்களை பார்வையிட சிக்கல்கள் இருப்பதை அறிந்து , உங்களுக்கு தேர்வு முடிவுகள் எளிதில் பார்வையிட இந்த சுட்டியை வழங்குகிறோம்.

http://www.jaf.8k.com/plustworesults.html

அணைத்து பன்னிரெண்டாம் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கும் , நல்ல மதிப்பெண் எடுக்க வாழுத்துக்கள் !

 

 

பிளஸ் டூ விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் click here…

 

அதிக அளவில் தேர்ச்சி
பிளஸ்டூ தேர்வில் வழக்கம் போல மாணவியரே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 86.7 சதவீதமாகும்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 86.7 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகமாகும்.

இந்த ஆண்டும் வழக்கம் போல மாணவியரே அதிக அளவில்தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 89.7 சதவீத மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 83.2 சதவீதமாகும்.

அதிக அளவில் தேர்ச்சி அடைந்ததோடு இல்லாமல், முதல் 3 இடங்களிலும் மாணவிகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.

 • முதலிடத்தை நாமக்கல் மாணவி சுஷ்மிதா பிடித்துள்ளார்.
 • மாணவி சுஷ்மிதா 1200க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
  இயற்பியல் 200
  வேதியியல் 200
  உயிரியியல் 200
  கணிதப் 200
  பாடங்களில் இவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
  சுஷ்மிதா நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளி மாணவி ஆவார்.
 • 2வது இடத்தில் கார்த்திகா,அசோக்குமார் மற்றும் மணிகண்டன் பிடித்துள்ளனர். இவர்கள் 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மூவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடத்தக்கது..
 • 3வது இடத்தை 1187 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர். கணிதத்தில் 2656 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 • தமிழில் விழுப்புரம்
 • தமிழில் விழுப்புரம் ஏ.கே.டி.மாணவர் முத்துக்குமரன் 198 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் மொத்தம் 1186 மதிப்பெண்களைப் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.இயற்பியலில் 142 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். கடந்த வருடம் இந்த பாடத்தில் 646 பேர் 200க்கு 200 பெற்றிருந்தனர். இயற்பியல் பாடம் இந்த வருடம் மிகவும் சிரமமாக இருந்ததாக மாணவர்கள் குறிப்பி்ட்டிருந்தனர்.ஆங்கிலத்தில் நெல்லைநெல்லை மாணவர் ஸ்டெரபி கிரண் பாண்டியன் ஆங்கிலத்தில் 196 மதிப்பெண்களுடன் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.தாவரவியலில் குழித்துறை

  குழித்துறையைச் சேர்ந்த மாணவர் மிதுன் ஆனந்த் 200 மதிப்பெண்களுடன் தாவரவியல் பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

  வரலாற்றில் சென்னை

  வரலாற்றுப் பாடத்தில்தான் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. எம்எப்எஸ் தர்மா மேல்நிலைப்பள்ளி மாணவர் திலீப் இப்பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

  கணிதத்தில் 2656 பேர் 200க்கு 200

 •  பிளஸ்டூ கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ, மாணவியர் 200க்கு 200 எடுத்துள்ளனர்.பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ, மாணவியர்200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.மொத்தம் 2656 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண்களை அள்ளியுள்ளனர்.அடுத்து வேதியியல் பாடத்தில் 1444 பேரும், உயிரியல் பாடத்தில் 620 பேரும், கணிப் பொறியியலில் 618 பேரும் 200க்கு 200 பெற்றுள்ளனர்.

  இயற்பியலில் பெரும் சரிவு

  இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு வெறும் 142 பேர் மட்டுமே சதம் போட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இப்பாடத்தில் 646 பேர் சதம் போட்டு அசத்தியிருந்தனர். இதில் பெரும் சரிவை இந்த ஆண்டு மாணவர்கள் சந்தித்துள்ளனர்.

  அக்கவுண்டன்சியில் 2518 பேர் சதம்

  அதேபோல அக்கவுண்டன்சியில் மாநிலத்தில் மொத்தம் 2518 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  6 பேர் மாநில ரேங்க் ஹோல்டர்கள் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்

  முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி , கண்டம்பாளையம், நாமக்கல் மாவட்டம், இரண்டாமிடம் ; கார்த்திகா, ( 1188 மார்க்குகள்) எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி , கண்டம்பாளையம், நாமக்கல் மாவட்டம், அசோக்குமார் ( 1188 மார்க்குகள்) கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி நாமக்கல், மணிகண்டன் வி ( 1188 மார்க்குகள்) விவேகானந்தன் மேல்நிலைப்பள்ளி பண்டமங்கலம் நாமக்கல், ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். மகேஸ்வரி ( 1187 மார்க்குகள்) , வித்யாவிகாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி திருச்செங்கோடு, நாமக்கல், பிரபா ங்கரி எஸ்.கே.வி.,மேல்நிலப்பைள்ளி கண்டம்பாளையம், நாமக்கல். முதல் 3 இடங்கள் உள்பட மொத்தம் 6 பேர் மாநில ரேங்க் ஹோல்டர்கள் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியதால் இம்மாவட்ட மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.