லண்டன் – ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் விஜேந்தர் சிங் தகுதி பெற்றுள்ளார். 75 கிலோ பிரிவில் இவர் கஸகஸ்தானைச் சார்ந்த டனாபெக் சுஜானாவை தோற்கடித்தார். 14-10 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற விஜேந்தர் சிங், 02.08.2012 அன்று இரண்டாவது சுற்றில் அமெரிக்காவைச் சார்ந்த டெர்ரல் கவுஷாவுடன் மோதுகிறார். விஜேந்தர் சிங் கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் ஸ்வர்ன் சிங் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். 2 கி.மீ.தூரத்தினை இவர் 7 மணி 49 வினாடிகளில் கடந்தார். காலிறுதி போட்டிகள் செவ்வாய் அன்று நடைபெற உள்ளது.

பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவல் வெற்றி பெற்றுள்ளார். இவர் சுவிட்சர்லாந்தின் சப்ரினாவை 21-9, 21-4 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றார். 30.7.2012 அன்று நடைபெற உள்ள இறுதி லீக் ஆட்டத்தில் இவர் பெல்ஜியத்தின் லியானே டானாவை எதிர்ககொள்கிறார்.