லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா பங்கேற்றார். அவர் 65.20 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இறுதிப் போட்டிக்கு மொத்தம் 12 பேர் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.

முன்னதாக வட்டு எறிதலில் இந்தியாவின் பூனியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் ஏழாவது இடத்தை அவர் பிடித்ததால் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது. இப்போது விகாஸ் கவுடா மூலமாக மீண்டும் பதக்க வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது.

2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியிலும் வட்டு எறிதலில் இறுதிப் போட்டியில் விகாஸ் கவுடா கலந்து கொண்டிருந்தார்.