இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிந்த காலண்டுப் பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த காலாண்டில் பொருளாதார வளரச்சி 5.3 சதமாக இருந்தது. சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி மிகவும் குறைவு. பொருளாதார சீர்திருத்தங்கள் இல்லாத நிலையில் இந்தியாவில் மந்த நிலை குறித்த கவலைகள் அதிகமாக இருக்கின்றன. உலகப் பொருளாதார சூழல் காரணமாகவும், கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகவும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வரும் ஊழல் புகார்கள் காரணமாக இந்தியா மீதான மதிப்பு குறைந்துள்ளதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் குறைந்துவருகிறது.

இந்தியப் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக 8 சதவீதம் என்ற அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என்ற அளவுக்கே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisements