மம்மூட்டி என்று அறியப்பட்ட -இவரின் பெயர்  முஹம்மது குட்டி, சமீபத்தில் சிவாகாசியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள அக்னிஜித் மருந்துப் பொருள்களை இலவசமாக கொடுத்து நடிகர் முஹம்மது குட்டி(மம்முட்டி) உதவியுள்ளார்.

38 பேரை பலிகொண்ட சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தினால் பலபேர் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தீக்காயங்களுக்கு சிறந்த நிவாரணமாக அக்னிஜித் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தை தயாரிக்கும் ‘பதஞ்சலி ஆயுர்வேத’ நிறுவனம் நடிகர் முஹம்மது குட்டி(மம்முட்டி)க்கு சொந்தமானதாகும்.

சிவகாசி விபத்தில் தீக்காயங்கள் அடைந்து மருத்துவமனையில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, அக்னிஜித் மருந்து வேண்டும் என பதஞ்சலி நிறுவனத்தைத் சிவகாசி அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்த விஷயம் நடிகர் முஹம்மது குட்டிக்கு தெரிய வந்தது. உடனே மொத்த மருந்துகளையும் இலவசமாகவே அனுப்பி வைக்கும்படி அவர் கூறியிருக்கிறார். இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். மேலும் இனி எவ்வளவு மருந்துகள் தேவைப்பட்டாலும் அனைத்தையும் இலவசமாகவே வாங்கிகொள்ளுங்கள் என முஹம்மது குட்டி(மம்முட்டி) கூறியிருக்கிறாராம்.

சிவகாசி தீவிபத்திற்காக தமிழக திரையுலகைச் சார்ந்தவர்கள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த மம்முட்டியின் இந்த உதவி அனைவரையும் நெகிழவைத்திருக்கிறது. (டிஎன்எஸ்)

மம்மூட்டி என்று அறியப்பட்ட -இவரின் பெயர்  முஹம்மது குட்டி , இங்கு மொழி, மதம், மாநிலம் அனைத்தும் தாண்டி பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம் மனிதாபிமானம்…….

இந்த மனிதாபிமானம் தமிழ் நடிகர்களிடம் இல்லாமல் போனது … வேதனைக்குரியது ……