டெல்லியில் இளம் மாணவி மிகவும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும், அதனால் அவர் மரணமடைந்திருப்பதும், மரண தண்டனை போன்ற கடுமையான ஒரு தண்டனை அவசியம்தான் என்பதை நினைவூட்டுகிறது என்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்காமல் உள்ள நாடு சிங்கப்பூர். அங்கும் இந்தியாவைப் போலவே மரண தண்டனையை ஒழிக்கக் கோரி பல்வேறு விதமான கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில் டெல்லி சம்பவத்தை மேற்கோள் காட்டி மரண தண்டனை தேவைதான் என்று அந்த நாட்டு சட்ட அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் அவர் எழுதியிருப்பதாவது… ஒரு இளம் இந்தியப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அவர் மரணத்தைத் தழுவியதும் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அது பட்டப் பகலில் நடந்துள்ளது. ஒரு இளம் உயிர் மிகக் கொடுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த இளம் பெண்ணை நம்பி அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். தனது நிலத்தை விற்று அப்பெண்ணை அவரது தந்தை படிக்க வைத்துள்ளார்.

நமது ஆழ்ந்த அனுதாபங்களை அந்தக் குடும்பத்திற்கு நாம் தெரிவித்துக் கொள்வோம். இது இதயத்தை முறித்துப் போடும் சம்பவமாக உள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மரண தண்டனையை சந்திக்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுவோரிடம் நான் இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி வேண்டும் என்று வாதிடுவேன் என்று கூறியுள்ளார் சண்முகம்
.

மதுரை ஆதீனம்
இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்.
baddress
இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர்.

இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

“நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்” – மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்