வெளிநாடுகளுக்குப் போய் தங்கி வேலை பார்ப்பவர்களில் சொந்த நாட்டிற்கு அதிக அளவில் பணம் அனுப்புவது இந்தியர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பொன்மொழிக்கேற்ப சொந்த நாடு நகரத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.
இந்தியர்களும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கி வேலை பார்க்கின்றனர். வெளிநாடு செல்லும் எல்லோருக்கும் ஏசி ரூம் வேலை கிடைத்து விடுவதில்லை. வெயில், மழை, குளிர் ஆகியவற்றை பொருட்படுத்தாமலும் கடுமையாக உழைத்து தாய்நாட்டில் வசிப்பவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கின்றனர். இந்தியர்கள் முதலிடம் இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியவர்கள் என்ற பெருமை இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது.
கடந்த, 2012ம் ஆண்டில், பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் வசிக்கும் தங்களின் சொந்த பந்தங்களுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இவ்வளவு அதிக தொகையை, வேறு எந்த நாட்டினரும், தங்கள் நாட்டிற்கு அனுப்பாததால், அதிக பணத்தை பெற்ற நாடு என்ற ரீதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
சீனா இரண்டாவது இடம் வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 36 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர். இது இரண்டாவது இடமாகும். அதற்கு அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன. வளரும் நாடுகள் அதிகம் வளரும் நாடுகளில், தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகள் தான், அதிக அளவில், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தங்கள் நாட்டினர் மூலம் ஏராளமான பணத்தை பெற்றுள்ளன.
அதிக அளவு குடியேற்றம் வளரும் நாடுகளில் இருந்து ஏராளமானோர் குடியேறும் நாடாக, அமெரிக்கா விளங்குகிறது. அதே நேரத்தில், ஏராளமான பணத்தை அனுப்பும் நாடாகவும் அமெரிக்கா விளங்குகிறது.