ஃபேஸ்புக் பயனாளர்களின் சொந்தத் தகவல்கள் அதிக அளவில் வேறு பயனாளர்களால் திருடப்படுகிறது. தவிர அவை வர்த்தக நோக்கில் விலை பேசப்படுவதும் அதிகரித்துள்ளது.

இதனால் தங்களின் ரகசியங்கள் பறிபோவதாக ஃபேஸ்புக் பயனாளர்கள் கருதுவதாலும் அவர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் போர் அடித்துப் போயும் பலர் விலகியுள்ளனர்.

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 6 லட்சம் ஃபேஸ்புக் பயனாளர்கள் பேஸ்புக் தளத்தில் இருந்து விலகி வருவதால், பேஸ்புக் தன் பயனாளர்களில் 2.88 சதவீதத்தை இழந்துவிட்டது. சோஷியல் பேங்கர்ஸ் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தவிர நண்பர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில் கட்டுப்பாடு உள்ளிட்டவையும் ஃபேஸ்புக் தளத்தில் இருந்து பயனர்கள் விலகக் காரணமாக அமைவதாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.