பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையையொட்டியுள்ள தங்கள் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்துள்ளது.

16-landmine-300இந்த விவகாரத்தைப் பட ஆதாரத்துடன் இந்திய இராணுவத் தலைமை வெளியிட்டுள்ளது, மேலும் நேற்று முந்தினம் பாகிஸ்தான் இராணுவத் தலைமையுடன் சந்திப்பு நடைபெற்ற கொடிநாள் நிகழ்ச்சியிலும், பட ஆதாரங்களைக் காண்பித்து பாகிஸ்தான் இராணுவத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நடப்பில் இருந்தும், நூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த மீறல்களில் பாகிஸ்தான் இராணுவம் ஈடுபட்டதற்கும், ஈடுபட்டு வருவதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலை லெப்டினெண்ட் ஜெனரல் பர்நாயக் தெரிவித்துள்ளார்

Advertisements