எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். தமிழகத்தில் 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது.
இதில் மொத்தம் 2145 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இவற்றில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 322 போக மாநில ஒதுக்கீட்டு இடங்கள் 1823 உள்ளன. 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 838 இடங்கள் உள்ளன.
இது தவிர பிடிஎஸ் படிப்புக்கு சென்னையில் உளள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் 85, அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 உள்ளன. 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 909 உள்ளன. மேற்கண்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான இடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது.
ரூ. 500க்கான டிடி எடுத்து விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதற்கான சான்றுகளை கொடுத்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.