முடிவுகள் வெளியாகும் அரசின் இணையதளங்கள்…

http://tnresults.nic.in

http://dge1.tn.nic.in

http://dge2.tn.nic.in

http://dge3.tn.nic.in

இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்டூ தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். இதில் நாமக்கல் மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்தனர்.

2வது இடத்தை 2 பேரும், 3வது இடத்தை 9 பேரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முதலிடத்தில் நாமக்கல் நாமக்கல் வித்யவிகாஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா 1189 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். 1189 மதிப்பெண்களைப் பெற்ற நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவர் அபினேஷும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
2வது இடத்தில் இருவர் அதேபோல மாணவர் பழனிராஜ் மற்றும் மாணவி அகல்யா ஆகியோர் தலா 1188 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்தனர். பழனிராஜ் நாமக்கல் வித்யவிகாஸ் பள்ளியைச் சேர்ந்தவர். அகல்சா, ஓசூர் ஸ்ரீவிஜய் பள்ளியைச் சேர்ந்தவர்.

9 பேருக்கு 3வது இடம் 3வது இடத்தை 9 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அபினேஷுக்கு 3 பாடங்களில் முதலிடம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளநாமக்கல் மாணவர் அபினேஷ் 3 பாடங்களிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மின் தடை விலக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையே இன்று +2 தேர்வு முடிவுகளை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் மின் தடையில் இருந்து விலக்கு என சட்ட சபையில் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.