indian_old_person_200_200உலகின் வயதானவர் என்ற பெருமையை காஷ்மீரை சேர்ந்த ஃபெரோஸுத்தீன் மீர் என்ற தாத்தா பெறுகிறார்.

141 வயதான இவர் ஆவணங்களின் படி 1872 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பிறந்ததாகக் கூறப் படுகிறது. எனினும் இதற்கு முன்பே இவர் பிறந்திருக்கலாம் என்றும் கூறப் படுகிறது.

ஃபெரோஸ் இன்னும் சிறப்பாக பேசுகிறார் ஆனால் வார்த்தைகள் உடைந்து வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினரையும் நன்கு அடையாளம் தெரிகிறது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ஃபெரேஸ் தொழில் புரிவதற்காக பாகிஸ்தானுக்கு பலமுறை பயனித்து வந்துள்ளார். மேலும் 1880 களில் காஷ்மீரில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்தும் உயிர் பிழைத்துள்ளார்.

Advertisements