வரும் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கலால் விளைந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரசு நிறுவனங்களை அமெரிக்க அரசு மூடியுள்ளது.

obamaஅமெரிக்க அதிபர் ஒபாமா 2வது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கை அமெரிக்க பாராளுமன்றத்தால் ஏற்று கொள்ளப்படாததால் அமெரிக்க அரசு நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஒபாமா கேர் என்று அழைக்கப்படும் சுகாதார நலத்திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிதி நிலை அறிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.

இந்நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அரசு நிறுவனங்களை நிதி நிலை அறிக்கை நிறைவேறும் வரை மூட உத்தரவிட்டுள்ளது.

முதல் கட்டமாக 7 இலட்சத்து 83 ஆயிரம் பேரை ஊதியமில்லா விடுப்பில் செல்ல பணித்துள்ளது. சுகாதாரம், ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபட்டோர்க்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.

ஒரு சில வாரங்களில் நிதி நிலை அறிக்கை ஏற்கப்பட்டால் மிகப் பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று சொல்லப்படும் அதே வேளையில் இந்நெருக்கடி நீளும் பட்சத்தில் உலக பொருளாதாரத்தில் மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.