தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்ய இன்றே (ஜூலை 31) கடைசி நாளாகும்.

இதற்கு மேலும் வருமான வரித் தாக்கலுக்கு காலக்கெடு வழங்கப்படாது என்பதால் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோர் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வருமான வரி அலுவலகங்களில் குவிந்துள்ளனர்.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளவர்கள் தங்களது வருமான வரி கணக்கை ஆன்-லைன் மூலமாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை நெரிசலின்றி தாக்க செய்ய வசதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளில் (கவுன்ட்டர்) கடந்த இரண்டு நாள்களில் மாதச் சம்பளதாரர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர்.

Advertisements