காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது.
வீரர் வீராங்கனைகளை ஊக்கபடுத்தும் வகையில்
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை அதிகரிக்க ஹரியானா மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, காமன்வெல்த் போட்டியில்
தங்கம் வென்றால் ரூ.1 கோடியும்,
வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.5 லட்சமும்,
வெண்கலப் பதக்கம் வென்றால் ரூ.25 லட்சமும்
ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.இதே போல ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்
தங்கம் வென்றால் ரூ.2 கோடியும்,
வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும்,
வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும்
ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஒலிம்பிக் போட்டியில்
தங்கம் வென்றால் ரூ.5 கோடி,
வெள்ளி வென்றால் ரூ.3 கோடி,
வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி
பரிசு வழங்கப்படும் என்றும் ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த 8 வீரர்கள் 3 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற வீரரான சஜீவ் ராஜ்புட்க்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியும்
கபடி வீரரான கான்ஸ்டபிள் ரமேஷ்குமாருக்கு , பதவி உயர்வு கொடுத்து , இன்ஸ்பெக்டர் பதவியும்
மல்யுத்த வீரரான அணில் குமாருக்கு இன்ஸ்பெக்டர் பதவியும்
பெண்கள் பிரிவில் கபடி வீரரான பரிமள தேவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியும் கொடுத்து கவுரவிப்பதாக ஹரியானா மாநில முதல்வர் அறிவித்தார் .
இந்தியாவில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு தான் முக்கியம் கொடுக்கபடுகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் , ஹரியானா அரசின் இந்த அறிவிப்பு , மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.