பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்கிறோம் என்ற போர்வையில் பாலஸ்தீனர்களை பூண்டோடு அழிக்கும் வகையில் கொடுந்தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இத்தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பலியாகி உள்ளனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்துக்கும் யூதர்களுக்கும்(இஸ்ரேல்) பிரச்சனை தான் என்ன ?
46 வரை முழுமையாக பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம்.1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்ட சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு அதன் ஒரு பகுதி வந்தேறிகளான யூதர்களிடம் கொடுக்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட தாக்குதல் மூலம் பாலஸ்தீனின் பெரும்பான்மை இடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர்.
(ஒரு சாமானியனின் கேள்வி ?
இந்த அமெரிக்க , இங்கிலாந்து ஐ.நா சபை , இந்த இஸ்ரேலுக்கு உண்மையாக உதவ வேண்டும் என்றால் , உன் நாட்டில் குடியமர்த்த வேண்டியது தானே ? எண்டா அடுத்த நாட்டுக்குள் வச்சீங்க ? அப்ப இதிலிருந்து உங்களின் உள்நோக்கம் அந்த பகுதியில் அமைதி இகுக்க கூடாது ???? நல்ல இருக்குடா உங்க நியாயம்.)
2000 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான (காசா மேற்குக்கரை ) உள்ளிட்ட சில பகுதிகளை தவிர 90% அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.இன்று மேற்குக்கரையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பத்தாஹ் கட்சியின் அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் எந்த ஐநா சபை பாலஸ்தீனத்தை திருடி இஸ்ரேல என்ற ஆக்கிரமிப்பு தேசத்தை உருவாக்கியது மேலும் இஸ்ரேல ஆக்கிரமிப்பை செய்யும் போதெலாம் கண்டு கொள்ளாமல் இஸ்ரேலை பாதுகாத்ததோ அந்த அமைப்பில் சுதந்திர பாலஸ்தீனம் என்ற ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார் வழக்கம் போல அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது எதிர்ப்பை காட்டிவருகிறது.
இதில் அபாஸ் கோருவது ஒன்றும் முழுமையான பாலஸ்தீனத்தை அல்ல .மாறாக 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது 1967 ஆண்டிற்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமிட்ட பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு சொந்தம்.1967 ஆம் ஆண்டிற்கு பின் மீதம் இருக்கும் பகுதிகள் பகுதிகள் பாலச்டீநியர்களுக்கு சொந்தம்.மீதமுள்ள பகுதி என்பது வெறும் 20% இடங்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு சொந்தம் என்ற கோரிக்கையை அப்பாஸ் ஐநா(நைனா)சபையில் விடுத்துள்ளார்.
இது எந்த வகையிலும் பலஸ்தீனத்திற்கு பலனை தரப்போவதில்லை மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.
அப்பாஸின் இக்கோரிக்கையை ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன சுதந்திர போராட்ட குழுக்கள் நிராகரித்து விட்டனர்.பாலஸ்தீனியர்கள் மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் எவருமே இதைப் போன்ற அடிமைத்தனத்தை விரும்பவே மாட்டன்.
உலகின் மிகப் பெரிய திருட்டு எது என்றால் அது நிட்சயம் இஸ்ரேல் என்ற ஐரோப்பிய நாட்டினால் வந்த வந்தேறிகளால் திருடப்பட்ட பாலஸ்தீனம் தான்.இன்றுவரை தொடரும் சியோனிச திருட்டை எந்த ஒரு நாடும் தட்டிக் கேட்கவில்லை என்பதே நிதர்சனமான் உண்மை.சியோனிச நாட்டின் பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பை விளக்கும் வரய்படம் தான் இது…
சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக வாழ்விடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். எகிப்தின் முன்முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகிவிட்டது.
இந்த நிலையில் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் மொத்தம் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட 9 குழந்தைகளும் அடக்கம் என்கிறது யுனிசெப் அறிக்கை. மேலும் காஸா பகுதி குழந்தைகளின் உளவியல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறது யுனிசெப்.
வரலாறு தெரிந்த எவரும் இஸ்ரேலை ஆதரிக்கவே மாட்டன்.ஏனெறால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்து பலஸ்தீனில் உள்ள பூர்விக குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்றி அல்லது அவர்கள் கொன்று குவித்து அந்த நாட்டில் ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கியவந்தேறிகளான யூதர்கள் இஸ்ரேல என்ற நாட்டை உருவாக்கினர் இன்றுவரை பாலஸ்தீனர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இஸ்ரேலை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் காப்பாற்றி வருகிறது.
தனது சொந்த நாட்டிற்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறினால் அதை எப்படி ஏற்க்கமுடியும் அப்படி ஏற்றுக்கொண்டால் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற போராடிய போராளிகளான திப்பு சுல்தான் சுபாஸ் சந்திர போஸ்,பகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நாம் தீவிரவாதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.எனேற்றால் இவர்களை அப்போதைய வெள்ளை அரசு தீவிரவாதிகள் என்றுதான் அழைத்தது.பயங்கர வாதமும் ஏகடியபத்தியமும் என்றும் நிலைத்ததாக வரலாறே கிடையாது.இதை இஸ்ரேலிற்கு காலம் உணர்த்தும்.
complete wrong and stupid article.
Prove it wrong ,
here is the news link
http://www.newsonews.com/view.php?22cOl72bcW80Mb4e3IMM402dBnB3dd0nBn5302C6A42e4K08Secb3lOKc3