பள்ளி மாணவர்களை அடிக்கவோ, அல்லது வேறு எந்த வகையிலும் துன்புறுத்தவோ கூடாது என்று மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:”மாணவ, மாணவிகள் எந்த விதத்திலும் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக் கூடாது. மாணவர்களை ஆசிரியர்கள் எந்த சூழ்நிலையிலும் திட்டக் கூடாது. எந்த பொருட்களை கொண்டும் அடிக்க கூடாது. அவ்வாறு ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

schoolpunishment_xlargeபல்வேறு தவறுகளில் ஈடுபடும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு, வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், முழங்கால் போட வைத்தல், ஸ்கேலால் அடித்தல் உள்ளிட்ட தண்டனைகளை வழங்கப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் இதைவிட கொடுமையான தண்டனைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் இது போன்ற செயலால் ஒரு சில மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் தமிழகத்தில் அடிக்கடி நடக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவதை தடுக்க பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவது ஓரளவு குறைந்து விட்டது.

எனினும் இன்னும் ஒரு சில பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. சமீபத்தில் கூட, இரும்பு ஸ்கேலை கொண்டு ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவர் கண் பார்வை இழந்தமை குறிப்பிடத்தக்கது.