இந்து மதத்தை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது

பெயர் அருண் செல்வராஜ் , சென்னை, சாலிகிராமம், கே.கே.சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த, பாக்., உளவாளியும், இலங்கை தமிழருமான அருண் செல்வராஜை, 26, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

கோடிகளில் புரண்டு, பெarun selvarajரும் தொழில் அதிபர் போல், ஆடம்பர வாழ்வு நடத்தி, உளவுத் தகவல்களை சேகரித்து வந்த, அருண் பற்றி, பூதம் கிளம்பியது போல் ஏராளமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து நீண்ட நாள் தங்கியிருப்பதும், சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் உளவு பார்த்திருப்பதும், பல முக்கிய இடங்களைப் படம் பிடித்திருப்பதும்  தெரியவந்ததாக அதிரிகள் கூறினர்.

ஹைடெக்’ நிகழ்ச்சி தயாரிப்பாளர், போலி பத்திரிகையாளர் போல், சென்னையில் உலா வந்த பாக்., உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை, ‘பப்பு’களில் கிறங்க வைத்து, ரகசிய தகவல்களை கறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, ‘லேப்-டாப், கேமரா, ஹார்டு டிஸ்க், ‘சிடி’ போன்றவற்றை ஆய்வு செய்த போது, அந்த இளம் பெண்கள், ஐதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இருப்பதும் தெரிய வந்துள்ளது, அருண் செல்வராஜ், பத்திரிகை குறிப்பு தயாரிப்புக்கு என, பல்வேறு இடங்களுக்கு சென்று, உளவு பார்த்துள்ளான்.அவன் எடுத்துள்ள படம் மற்றும் வீடியோ பதிவுகள் அனைத்தும், கடல் வழி ஊடுருவலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளன.

பாக்., உளவாளி அருண் செல்வராஜ், மாமல்லபுரம் வந்து சென்றதாக, பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னையில், தொழில் அதிபர் போர்வையில், பாக்., உளவாளியாக செயல்பட்டு வந்த, இலங்கை தமிழர் அருண் செல்வராஜை, தேசிய புலனாய்வு அமைப்பினர், கடந்த 10ம் தேதி, சென்னை, சாலிகிராமத்தில் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சென்னை மற்றும் கல்பாக்கம் அணுசக்தி வளாகம் ஆகிய இடங்களில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சதி அம்பலமானது.

இவனை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ய வில்லை , குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு , நிரூபணம் ஆனா பின்பு தான் கைது செய்யபட்டு இருகின்றார்.

இந்த அருண் செல்வராஜ் – ஒருவேளை தலைமறைவாகி இருந்தால் , பைல் மூடுவதற்காக (அல்லது) இவன் சிக்கும் வரை ஒரு முஸ்லிம் நபரை இந்த வழக்கில் சிக்க வைக்கபட்டிருப்பான் ,

பத்திரிக்கைகள் ஒரு மாதத்திற்கு தலைப்பு செய்தியாக , முஸ்லிம்கள் அனைவரும் தேச துரோகிகள் என்பது போன்ற பல்வேறு கதைகள் பின்னி பிணைந்து கதைகளை வெளியிட்ட வண்ணம் , செய்தி வெளியிட்டு இருப்பார்கள் .
உண்மை குற்றவாளி கிடைத்த பின்பு , அந்த முஸ்லிம் நபரை நிரபராதி  என்று விடுதலை செய்வார்கள் , நிரபராதி என்று வெளிவந்த செய்தியை  ஒரு பொட்டி செய்தியாக கூட இதே பத்திரிக்கைகள் போடவில்லை.
இதனை  பார்க்கும் நடுநிலை சொம்புகளும் , அரெஸ்ட் ஆகும் நபர் முஸ்லிம் தானே என்று வியாக்கியானம் பேசுவார்கள் ,

நாளை போலீஸ் உங்களில் ஒருவரை கூட சந்தேகத்தின் பெயரில் அரெஸ்ட் செய்யலாம் , அதற்காக நீங்கள் குற்றவாளி என்றாகிவிடாது , குற்றம் உண்மையில் நிருபிக்கபடாத வரை,

சந்தேகத்தின் பெயரால் அரெஸ்ட் யாரை வேண்டுமானாலும் செய்ய போலீஸ் தயங்காது , அனால் அப்படி அரெஸ்ட் செய்த எதனை பேர் குற்றம் நிரூபிக்க பட்டவர்கள்? , என்று தான் சிந்திக்க வேண்டும்.
ஆதிக்க சக்திகளால் கொடுக்கப்படும் எலும்பு துண்டுக்கு (காசுக்கு குறைக்கும்) அலையும் நாய்களை போன்று, இன்றைய பத்திரிக்கை உலகம் ,சமுதாய அக்கறையை  ஓரங்கட்டிவிட்டு – காசுக்காக பரபரப்புக்காக ,இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது , இதனை பத்திரிக்கைகள் தவிர்க்க வேண்டும்.  சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் செயலை தவிர்த்து பத்திரிக்கைகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
பொது ஜனமாகிய நாமும் இதனை உணர்ந்து ஒரு செய்தியை பரப்புவதற்கு முன் , அந்த இடத்தில் நாம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்டிருந்தால், என்ற சிந்தனையோடு – அதன் உண்மை நிலையை பார்க்க வேண்டும், சகோதரத்துவம் பேன வேண்டும்.