ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 3,000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் தகுதி பெற்றுள்ளார்.

3,000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் போட்டியின் தகுதிச் சுற்றில், இந்தியாவின் லலிதா பாபர், சுதா சிங் உட்பட 52 வீராங்கனைகள் பங்கேற்றனர். மூன்று தனிப் போட்டிகளாக நடைபெற்ற தகுதிச் சுற்றில், லலிதா பாபர் 2வது தகுதிப் போட்டியில் கலந்து கொண்டார்.

பந்தய தூரத்தை 9 நிமிடங்கள் 19.76 விநாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்ற வீராங்கனைகள் பட்டியலில் லலிதா பாபருக்கு ஏழாவது இடம் கிடைத்தது.

Advertisements