ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா – ரோகன் போபண்ணா ஜோடி தகுதி பெற்றது.
sania

கால் இறுதியில் இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் – ஆண்டி மர்ரே ஜோடியுடன் மோதிய சானியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்றது. இப்போட்டி 1 மணி, 7 நிமிடம் நீடித்தது. அரை இறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் – ராஜீவ் ராம் ஜோடியை சானியா – போபண்ணா இணை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் வென்று பைனலுக்கு முன்னேறினால், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் உறுதியாகும். அரை இறுதியில் தோற்றால் வெண்கலப் பதக்கத்துக்காக மோத வேண்டியிருக்கும்.

Advertisements