குத்துச்சண்டை போட்டியில இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் காலிறுதிக்கு முன்னேறினார்.

ரியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் ஆண்கள் 75 கிலோ எடைப்பிரிவின் ‛ரவுண்ட்-16′ சுற்றில், இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன், துருக்கியின் ஒண்டர் சிபலை எதிர்த்து விளையாடினார். இதில் சிறப்பாக செயல்பட்ட விகாஷ் கிருஷ்ணன், 3-0 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதனையடுத்து இப்பிரிவின் காலிறுதிக்கு முன்னேறினார்.