சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையாகும். இந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களாகவே தென் மேற்கு பருவமழை குறைந்துவிட்டது. அதாவது சராசரியை விட 70 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் சிறிய அளவில்தான் பெய்தது.
மேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. கடல்காற்று தரையை நோக்கி வீசும்போது மிகவும் வலு இழந்து காணப்படுகிறது.