ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்துள்ளார்.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை “பிரீ ஸ்டைல்” பிரிவில் நடந்த ரெபிசாஜ் சுற்றில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெற்றி பெற்றார். மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் நடந்த இப்போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்ஷி மாலிக், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.
என் மகள் அல்ல தேசத்தின் மகள்..
சாக்ஷி மாலிக்கின் தாயார் மகிழ்ச்சி + நெகிழ்ச்சி!