பாஜகவிற்கு எதிரான 5 ஆதாரங்கள்! ரபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ..

ரபேல் ஒப்பந்தம் குறித்தும் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட வீடியோவில்  ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார் இதில் பேசியுள்ளார்.

ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரப்பியார் 2015 மார்ச்சில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. இதில் 5 முக்கிய உண்மைகள் வெளிவருகிறது, பாஜகவின் பொய் இதன் மூலம் அம்பலமாகிறது.


1. அவர் அதில் பேசும் போதே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனம் குறித்து பேசினார். அதில், ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்த பணிகள் நடந்து வருகிறது என்றுள்ளார். இதன் அர்த்தம், பாஜக ஆட்சி தொடங்கி 2015 வரை ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்துள்ளது. அப்படி என்றால், ஹிந்துஸ்தான் நிறுவனம் காங்கிரஸ் ஆட்சியிலேயே நீக்கப்பட்டுவிட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியது தவறு.

2. அதோடு அவர் தனது பேச்சில், ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய சந்தோசமாக இருக்கிறது. கடைசி கட்ட முடிவுகளை செய்ய எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் டஸால்ட் நிறுவனம்தான் ஹிந்துஸ்தான் நிறுவனத்தை வேண்டாம் என்று கூறியது என்ற வாதமும் பொய்யாகிறது. அந்த நிறுவனமே ஹிந்துஸ்தானுடன் ஒப்பந்தம் செய்ய ஆவலாக இருப்பதாக கூறுகிறது.

3. டஸால்ட் நிறுவனம் ஹிந்துஸ்தான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ஆவலாக இருப்பதாக கூறி 7 நாட்களில் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று வந்த பின் இந்த நீக்கம் நிகழ்ந்து இருக்கிறது. அதற்கு பதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அங்கு இடம்பிடித்துள்ளது.

4. இதனால் பாஜகதான் இந்த மாற்றத்தை செய்துள்ளது. பாஜகதான் ஹிந்துஸ்தான் நிறுவனத்தை நீக்கிவிட்டு அங்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை கொண்டு வந்துள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது உறுதியாகிறது …

5. அவர் விமான எண்ணிக்கை குறைவு குறித்து பேசி இருக்கிறார். அதாவது காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானம் ஒப்பந்தம் செய்யப்பட்டதையும், பாஜக ஆட்சியில் அது வெறும் 26 விமானங்களாக குறைந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அப்போது நிர்ணயித்த விலையை விட விமான விலை அதிகம் என்றும் கூறியுள்ளார்.

பாஜகதான் ஹிந்துஸ்தான் நிறுவனத்தை நீக்கிவிட்டு அங்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை கொண்டு வந்துள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது. அதோடு, பொய்யை  மட்டுமே பேசும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனால் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை வைத்துள்ளனர்.