கடந்த ஐந்து வர்த்தக தினங்களில், மும்பை பங்குச் சந்தை நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு, 8.50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று பங்கு வர்த்தகத்தின் போது, சீனா, வரி உயர்வு தொடர்பாக, அமெரிக்கா உடனான பேச்சை, ரத்து செய்து விட்டதாக தகவல் பரவியது. இதனால், சர்வதேச வர்த்தகப் போர் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்தில், முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பனை செய்தனர்.
இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில், 2,111 நிறுவனங்களின் பங்கு விலை, வீழ்ச்சி கண்டது. இச்சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, 500 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்தது. ஐந்து வர்த்தக தினங்களாக சரிவு தொடர்வதால், மும்பை பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 8 லட்சத்து,47 ஆயிரத்து, 974 கோடி ரூபாய் குறைந்து, 1 கோடியே,47 லட்சத்து, 89ஆயிரத்து, 45 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.