ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது திருமுருகன்காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ளார்.
இலங்கை தமிழர் படு கொலையில் சர்வதேச விசாரணை தேவை என மே 17 இயக்கத்தினர், மதிமுக உள்ளிட்டோர் போராடி வந்தனர்.
இந்நிலையில் உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறிவிட்டது.
இதை கண்டித்து கடந்த 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மே 17 இயக்கத்தினர், மதிமுக பொதுச் செயலாளர வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு திருமுருகன் காந்தி ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உள்ளது.