பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து உயர்வு பொதுமக்கள் கடும் அவதி,

காங்கிரஸ் ஆட்சியில் , விலைகுறைப்புக்கு எடுத்த நடவடிக்கை போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , பொதுமக்களை அவதிக்குள்ளாகி வேடிக்கை பார்க்கும் மோடி அரசை கண்டு எரிச்சலடையம் மக்கள் .

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் அதிகரித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இன்று பெட்ரொல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற காங்கிரஸ் ஆட்சியில் , விலைகுறைப்புக்கு எடுத்த நடவடிக்கை போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , பொதுமக்களை அவதிக்குள்ளாகி வேடிக்கை பார்க்கும் மோடி அரசை கண்டு மக்கள் எரிச்சலின் உச்சத்தில் உள்ளனர் .