அரசு கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பிற்கான கல்வி கட்டணத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

2010-11-ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்.சி. போன்ற முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து கட்டணம் ரத்து தொடர்பான கருத்துருவை கல்லூரி கல்வி இயக்குனர் அரசிடம் சமர்ப்பித்தார்.

இதை பரீசிலனை செய்த பின் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2010-11-ம் கல்வியாண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவலை அரசு முதன்மை செயலாளர் கணேசன் தெரிவித்தார்.

நன்றி :http://www.tntj.net/?p=17586