அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப புதன்கிழமை (ஆக.17) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம், போட்டி எழுத்துத் தேர்வு நடத்தி நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூலை 16, 20-ல் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு வரும் 22.10.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
jobs
தேர்வுக்குரிய விண்ணப்பங்கள், விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விற்பனை செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவித்துள்ள கல்வித் தகுதி, இதர தகுதியுடையவர்கள், விண்ணப்பிப்பதற்கு புதன்கிழமை (ஆக.17) காலை 10 மணி முதல் செப்.7-வரை மாலை 5 மணி வரை, விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.09.2016 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.