எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்றதக்கெல்லாம் சிரிச்சிட்டே விட்டுடலாம்’ தமிழிசை செளந்தர்ராஜன்
Tamilisai_Soundararajan_EPS
நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர் “பாஜக தலைமையை ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு இப்போது உள்ள வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும். பாஜக தலைமையை நீங்கள் மதிக்காமல் இருப்பது போன்ற தோற்றம் உள்ளதே என செய்தியாளர்கள் கேட்டனர் அதற்கு ” பாஜக கூட்டத்திற்கு அழைத்தால் தான் போக முடியும். நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது என்ன எனக்கு புரியவில்லை.

அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லட்டுமா? அவங்க எனக்கு வயசுல சின்னவங்க அப்படியே சொல்லணும் என்றால் தங்கச்சி என்றுதான் கூறவேண்டும்” என்று தெரிவித்தார். எஸ்.வி.சேகரின் இந்தப் பேச்சுக் குறித்து பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ” எஸ்.வி.சேகர் பல சிரிப்பு நாடகத்துல நடிச்சு நடிச்சு, நாடகம்னு நினைச்சு பேசிட்டார் போல. எஸ்.வி.சேகருக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. பாஜக தலைவர்னா அவ்வளவு லேசான விஷயமாக நினைத்துவிட்டார் அவர்” என தெரிவித்தார்.