முதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்..
புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான்
விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது.

இந்த புல்லட் ரயிலுக்கு ,  குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம்.


விவசாய நிலம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கடும்  எதிர்ப்பு
இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். இதனால் கடந்த வாரம் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். இந்த திட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனால் புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம். ”ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்” இந்த நிதியுதவியை நிறுத்தி இருக்கிறது. இதனால்  புல்லட் ரயில் பாதை போடப்படும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. காலவரையின்றி பணிகளை நிறுத்துவதாக ஜப்பான் நிறுவனம் தகவல் அளித்துள்ளது.